முகப்பு
திருநெல்வேலி

செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்    நடைபெற்றது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம்    நடைபெற்றது.
பல்கலைக்கழக செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமுக்கு,  பதிவாளர் சே. சந்தோஷ்பாபு தலைமை வகித்தார். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டாக்டர் எம். சார்லஸ் பிரேம்குமார்,  கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேணுகுமார், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி திட்ட அலுவலர் நாராயணராஜன், தென்காசி செஞ்சிலுவைச் சங்க அலுவலர் சுப்பிரமணியன்,  திருநெல்வேலி ப்ரோ விஷன் அமைப்பை சேர்ந்த சரண்யா,  மான்விழி உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.
இதில், திருநெல்வேலி, தூத்துக்குடி,  குமரி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளின் இளையோர் செஞ்சிலுவைச் சங்கத் திட்ட அலுவலர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் வெளியப்பன் வரவேற்றார். பல்கலைக்கழகத் திட்ட அலுவலர் சசிக்குமார் நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →