தச்சநல்லூர் பகுதியில் பிப்ரவரி 23 மின்தடை
தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை (பிப். 23) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வெள்ளிக்கிழமை (பிப். 23) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய திருநெல்வேலி நகர்ப்புற விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் த.ஐசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தச்சநல்லூர் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப். 23) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை தச்சநல்லூர், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யாநகர், தெற்கு பாலபாக்யாநகர், மதுரை பிரதான சாலை, திலக் நகர், பாபுஜி நகர், சிவந்திநகர், கோமதி நகர், சிந்துபூந்துறை, மணிமூர்த்தீஸ்வரம், இருதயநகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.