நெல்லை காய்கனி சந்தைகளில் எலுமிச்சை விலை வீழ்ச்சி
திருநெல்வேலி மாவட்ட காய்கனி சந்தைகளில் எலுமிச்சம்பழங்களின் விலை சரிந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்ட காய்கனி சந்தைகளில் எலுமிச்சம்பழங்களின் விலை சரிந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் சின்னவெங்காயம் கடந்த மே, ஜூன் மாதங்களில் கிலோ ரூ.30 முதல் ரூ.40-க்குள் விற்பனையாகி வந்தது. இந்நிலையில், ஜூலை முதல் நாளிலேயே வரத்து குறைந்ததால் சின்னவெங்காயத்தின் விலை கிலோ ரூ.57ஆக உயர்ந்தது. இந்த வாரத்தில் மேலும் ரூ.3 உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனையாகி வருகிறது. இதேபோல மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்த எலுமிச்சையின் விலை குறைந்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பு, சாரல் மழையால் தேவை குறைவு போன்ற காரணங்களால் எலுமிச்சை கிலோ ரூ.30-க்கு மட்டுமே விற்பனையாகிறது. இதனால் குடிசைத் தொழிலாக ஊறுகாய் தொழில் செய்வோர் எலுமிச்சை கொள்முதலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். திருநெல்வேலி உழவர் சந்தையில் காய்கனிகளின் ஞாயிற்றுக்கிழமை விலை நிலவரம் (ஒரு கிலோவுக்கு): கத்தரி-ரூ.20, வெண்டைக்காய்-20, தக்காளி-26, அவரைக்காய்-40, கொத்தவரை-20, புடலங்காய்-15, பாகற்காய்-30, பீர்க்கங்காய்-20, சுரைக்காய்-10, தடியங்காய்-17, பூசணிக்காய்-17, தேங்காய்-38, மாங்காய்-20, மிளகாய்-54, முள்ளங்கி-20, எலுமிச்சை-28, நார்த்தை-24, தண்டுக்கீரை-10, அரைக்கீரை-10, குத்துப்பசலைகீரை-10, மணத்தக்காளிகீரை-20, கொத்தமல்லி கீரை-26, கேரட்-38, பீட்ரூட்-40, உருளைக்கிழங்கு-26, செளசெள-18, ரிங் பீன்ஸ்-58, இஞ்சி-74, நெல்லிக்காய்-30, வாழைப்பழம்- 80, மாம்பழம்-60, பப்பாளி-80.