முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூர் அருகே பாலச் சுவரில் சுமை ஆட்டோ மோதல்: இருவர் சாவு

வள்ளியூர் அருகே பாலத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை சுமை ஆட்டோ மோதியதில் இருவர் இறந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.

Updated On : 9 ஜூலை, 2018 at 7:32 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

வள்ளியூர் அருகே பாலத்தின் மீது ஞாயிற்றுக்கிழமை சுமை ஆட்டோ மோதியதில் இருவர் இறந்தனர். ஒருவர் பலத்த காயமடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டையைச் சேர்ந்த தங்கபாண்டி மகன் அரிராமர் (25), அதே ஊரைச் சேர்ந்த கணபதி மகன் முத்துராஜ் (28). இவர்கள் இருவரும் அந்தப் பகுதியிலுள்ள தனியார் சோப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர். தினமும் சுமை ஆட்டோவில் சோப்பு பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு ஊர்களுக்குச் சென்று கடைகளுக்கு விநியோகம் செய்துவிட்டு வருவர்.
வழக்கம்போல் சனிக்கிழமை சோப்பு பெட்டிகளை ஏற்றிக்கொண்டு குமரி மாவட்டத்தில் உள்ள தக்கலைக்கு சென்றனர். இவர்களுடன் ராமலிங்கம் என்பவரும் சென்றார். அங்குள்ள கடைகளில் சோப்பு பெட்டிகளை கொடுத்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். சுமை ஆட்டோவை அரிராமர் ஓட்டி வந்தார். வள்ளியூரில் புறவழிச் சாலையில் ஏர்வாடி பாலத்தில் வந்தபோது சுமை ஆட்டோ நிலைதடுமாறி பாலத்தின் சுவரில் மோதியது. இதில் ஆட்டோவின் முன்பகுதி  பலத்த சேதமடைந்தது. அரிராமரும், முத்துராஜும்  பலத்த காயமடைந்து  சம்பவ இடத்திலேயே இறந்தனர்.  ராமலிங்கம் பலத்த காயமடைந்தார். அவரை வள்ளியூர் போலீஸார் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து தொடர்பாக வள்ளியூர் காவல் நிலைய ஆய்வாளர் அங்கயர்கண்ணி  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.