திருநெல்வேலி

மணிமுத்தாறு அருவியில் 2ஆவது நாளாக குளிக்கத் தடை

DIN

மாஞ்சோலை மலைப் பகுதியில் தொடர் சாரல் மழையால், மணிமுத்தாறு அருவியில் 2ஆவது நாளாக குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென் மேற்குப் பருவமழை தீவிரமானதையடுத்து, திங்கள்கிழமை முதல் மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் சாரல் மழை பொழிந்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர் சாரல் மழை இருப்பதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மாஞ்சோலை மலைப் பகுதியிலும் தொடர் சாரல் மழை இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து வியாழக்கிழமை நண்பகல் 12 மணிமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. 
தொடர்ந்து வியாழக்கிழமை இரவும் சாரல் மழை நீடித்ததால், வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவி பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. 
இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதிக்கு செல்ல முடியாமலும், குளிக்க முடியாமலும் ஏமாற்றமடைந்தனர். மேலும், சாரல் மழை தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டால், பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT