அரசு மானியம் பெற்றுத் தருவதாக மோசடி: மதுரை இளைஞர் கைது
களக்காடு அருகே அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயியிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
களக்காடு அருகே அரசு மானியம் பெற்றுத் தருவதாகக் கூறி விவசாயியிடம் பணத்தை பெற்று மோசடி செய்ததாக மதுரையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
களக்காடு அருகேயுள்ள வடுகச்சிமதில் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல் மகன் நம்பிராஜன் (34). விவசாயியான இவர், தனக்குச் சொந்தமான நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் இவரை அணுகிய மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதியான பிரபு என்பவர், சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்காக அரசின் மானிய உதவித்தொகையை பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.74 ஆயிரத்தை வாங்கிச் சென்றாராம். ஆனால் இதுவரை மானிய உதவித் தொகையை பெற்றுத் தரவில்லையாம். பணத்தை திருப்பிக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி பிரபு மீது களக்காடு போலீஸில் நம்பிராஜன் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து பிரபுவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.