முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் புதன்கிழமை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை விடுவிக்க வேண்டும். பழிவாங்கும் போக்கோடு செயல்படுவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. 
ஆர்ப்பாட்டத்தில் முனனாள் மத்திய இணையமைச்சர் ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநில எஸ்.சி., எஸ்.டி. பிரிவுத் தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் மக்களவை உறுப்பினர் எஸ்.எஸ்.ராமசுப்பு, மாவட்டத் தலைவர்கள் கே.சங்கரபாண்டியன், எஸ்.கே.எம்.சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →