திருநெல்வேலி

"வள்ளியூர்-ராஜபுதூருக்கு பேருந்து இயக்க வேண்டும்'

DIN

வள்ளியூர்-ராஜபுதூருக்கு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வள்ளியூர் வியாபாரிகள் சங்கச் செயலர் எஸ்.ராஜ்குமார் திருநெல்வேலி மண்டல போக்குவரத்து மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு: 
வள்ளியூர்-ராஜபுதூருக்கு இடையே ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மேலும், இடைப்பட்ட கிராம மக்கள் வள்ளியூர் வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, வாடகை கார் போன்றவற்றில்தான் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பள்ளி மாணவர், மாணவிகள் காலை, மாலையில் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து வசதி இல்லை. 
எனவே,  மாணவர்,  மாணவிகளின் வசதிக்காக, வள்ளியூரில் இருந்து ராஜபுதூருக்கு,  காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து இயக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT