முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே விபத்து: பெண் சாவு

திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும், 9 பேர் பலத்த காயமடைந்தனர்.மேலப்பாளையத்தில் உள்ள வசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (35).

Updated On : 15 மே, 2018 at 3:50 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருநெல்வேலி அருகே திங்கள்கிழமை அதிகாலையில் நிகழ்ந்த விபத்தில் பெண் உயிரிழந்தார். மேலும், 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
மேலப்பாளையத்தில் உள்ள வசந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (35). திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரும், விளாகம் பகுதியைச் சேர்ந்த நண்பர் சண்முகம் (38) மற்றும் உறவினர்களுடன் குற்றாலத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு குளிக்கச் சென்றார். பின்னர், அனைவரும் திங்கள்கிழமை அதிகாலை காரில் ஊருக்குப் புறப்பட்டனர். இவர்கள், அபிஷேகப்பட்டியை அடைந்தபோது, எதிரே தூத்துக்குடியில் இருந்து நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரியும், இவர்களது காரும் மோதிக்கொண்டன.
இதில், மணியின் மனைவி அனுசுயா (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணி மருத்துவமனையில் இறந்தார். அவரது சகோதரர் குமார் (40), தாய் தனம் (65), சண்முகம், அவரது மனைவி செல்வி (33), குழந்தைகள் கார்த்திக் (8), சுபஸ்ரீ (3), கார் ஓட்டுநரான ஊருடையான்குடியிருப்பைச் சேர்ந்த சுரேந்தர் (21) உள்பட 9 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.