திருநெல்வேலி

முயல் வேட்டை: 14 பேருக்கு ரூ. 2.10 லட்சம் அபராதம்

DIN

களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம்,  கடையம் வனச் சரகத்தில் முயல் வேட்டையாடியதாக 14 பேருக்கு ரூ. 2.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
காசிநாதபுரம், பனையங்குறிச்சி உள்ளிட்ட கிராமப் பகுதியில் சிலர் நாய்களைக் கொண்டு முயல் வேட்டையாடுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வனச் சரகர் நெல்லைநாயகம் தலைமையில் வனவர் முருகசாமி, வனக் காப்பாளர்கள் அய்யாத்துரை, மணி, சுந்தரேசன், வனக் காவலர் ரமேஷ்பாபு, வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பசுங்கிளி, வேல்முருகன், சக்திமுருகன், முத்துக்குமார், பாலகிருஷ்ணன், மனோஜ்குமார் உள்ளிட்டோர் சென்று வேட்டையில் ஈடுபட்டோரைப் பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள், காசிநாதபுரம் சே. முருகன், பா. சுடலைஒளிவு, ஆ. முருகன், மு. மாரி, மா. முத்துப்பாண்டி, மா. சொரிமுத்து, மு. சிவசந்தனமாரி, சு. மாரிராஜ், சு. கணேசன், பா. சுரேஷ், மு. கதிரேசன், ப. சிவக்குமார், சு. அருள்ராஜ், அ. சுகுமார், முக்கூடல், சிவகாமிபுரத்தை சேர்ந்த மு. துரைராஜ், ஓடைதுலுக்கர்பட்டியைச் சேர்ந்த ஹ. வேல்முருகன் ஆகியோர் எனத் தெரியவந்தது. இவர்களில் சு. அருள்ராஜ், அ. சுகுமார் ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டனர். பிடிபட்ட 14 பேரும், அம்பாசமுத்திரம் துணை இயக்குநர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்பேரில் தலா ரூ. 15,000 வீதம் ரூ. 2.10 லட்சம் இணக்கக் கட்டணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
வன உயிரினங்களை வேட்டையாடுவது, வேட்டையாட முயல்வது வன உயிரினப் பாதுகாப்புச் சட்டப்படிக் குற்றம். வனச்சட்டம் மற்றும் வன உயிரினப் பாதுகாப்பு சட்டப்படி குற்றச் செயலில் ஈடுபடுவோர் குறித்த தகவலை வனச் சரக அலுவலகம், சிவசைலம் 94454 68577, 04634-283165 என்ற எண்களிலோ, அம்பாசமுத்திரம், துணை இயக்குநர் அலுவலகத்துக்கு 04634-250594 என்ற எண்ணிலோ தெரியப்படுத்த வேண்டும் என, வனச் சரகர் நெல்லை நாயகம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT