திருநெல்வேலி

தாமிரவருணி நதியில் தீப ஆரத்தி வழிபாடு

DIN

திருநெல்வேலி உடையார்பட்டி தாமிரவருணி நதிக்கரையில் இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில் சார்பில் தீப ஆரத்தி சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.
தாமிரவருணி மகா புஷ்கர விழா நடைபெற்று வருவதையொட்டி, திருநெல்வேலி இஸ்கான் கோயில் சார்பில் இந்த வழிபாடு நடைபெற்றது. அருள்மிகு உச்சிஷ்ட கணபதி கோயிலிலிருந்து கிருஷ்ணர் கவுராவாகவும், பலராமர் விதாயாகவும் எழுந்தருளினர். அங்கிருந்து கவுரா, விதாய் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையடுத்து உடையார்பட்டியில் அருள்மிகு பாலசுப்பிரமணியர் ஆலயம் அருகில் தாமிரவருணி ஆற்றுப் படித்துறையில் கவுரா, விதாய் சுவாமிகள் முன் தீப ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. மந்திரங்கள் முழங்க தாமிரவருணியில் தீப ஆரத்தி விடப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT