முகப்பு
திருநெல்வேலி

உயிர்நீத்த காவலர்களுக்கு வீரவணக்க அஞ்சலி

உயிர்நீத்த காவலர்களுக்கான வீரவணக்க அஞ்சலி நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 22 அக்டோபர், 2018 at 8:30 AM
பகிர்:

உயிர்நீத்த காவலர்களுக்கான வீரவணக்க அஞ்சலி நிகழ்ச்சி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். மற்றும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் அக். 21ஆம் தேதி போலீஸார் வீரவணக்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள நினைவு ஸ்தூபி அருகே நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சி கடந்த ஆண்டு ஆயுதப்படை மைதானத்திற்கு மாற்றப்பட்டது. 
நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 63 குண்டுகள் முழங்க போலீஸார் வீரவணக்கம் செலுத்தினர். திருநெல்வேலி சரக காவல் துணைத் தலைவர் கபில்குமார் சராட்கர்,  மாநகர காவல் ஆணையர் மகேந்திரகுமார் ரத்தோட், காவல் துணை ஆணையர்கள் பெரோஸ்கான் அப்துல்லா, சுகுணசிங் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.