கடனாநதியில் சிறப்பு ஆரத்தி வழிபாடு
தாமிரவருணி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, கிளை நதியான கடனாநதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது).
தாமிரவருணி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு, கிளை நதியான கடனாநதியில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது).
தாமிரவருணியில் மகா புஷ்கரம் விழா கடந்த அக். 11இல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தாமிரவருணி நதியின் கிளை நதியான கடனாநதியிலும் சிறப்பு ஆரத்தி வழிபாடு நடைபெற்றது. இதை முன்னிட்டு விநாயகர் பூஜை, ஜெபம், நவ வித அபிஷேகம், ஷோடச தீபாராதனை, பஞ்ச தீபாராதனை, பஞ்ச நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன. நிகழ்ச்சியில் கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு புனித நீராடினர்.