ஆலங்குளம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி சாவு
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே குளத்தில் குளித்த தொழிலாளி நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
ஆலங்குளம் அருகேயுள்ள கிடாரக்குளத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் அரிகிருஷ்ணன்(50). தொழிலாளி. இவர், அப்பகுதியிலுள்ள குளத்தில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் குளிக்கச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், அங்குள்ள குளத்தில் மூழ்கி அரிகிருஷ்ணன் உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்த போலீஸார், அவரது சடலத்தை மீட்டு, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.