திருநெல்வேலி

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பொக்லைன் ஊழியர் தவறிவிழுந்து பலி

DIN

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பொக்லைன் ஊழியர் அதிலிருந்து தவறிவிழுந்து செவ்வாய்க்கிழமை இறந்தார்.
திருநெல்வேலியை அடுத்த தேவர்குளம் அருகேயுள்ள புளியங்குடியைச் சேர்ந்தவர் இன்பராஜ். இவர் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொக்லைன் இயக்கும் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்தார். 
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பொக்லைன் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் இன்பராஜ் ஈடுபட்டுள்ளார். அப்போது, திடீரென தவறி விழுந்து பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து கூடங்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது தெலுங்கு தேசம்?

இந்தூர் தொகுதியில் இரண்டாம் இடத்தில் நோட்டா!

மக்களவைத் தேர்தல் நேரலை: தமிழகத்தில் முதன்முதலாக 10% வாக்கு பெற்ற பாஜக

தமிழ்நாட்டில் முதன்முறையாக 10%க்கும் மேல் வாக்குகளைப் பெற்றுள்ள பாஜக!

குஜராத்: 26 தொகுதிகளில் 24-ல் பாஜக முன்னிலை!

SCROLL FOR NEXT