திருநெல்வேலி

திசையன்விளை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கொடை விழா

DIN

திசையன்விளை தேவி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கொடை விழா மூன்று நாள்கள்  நடைபெற்றது.
விஸ்வகுல பொற்கொல்லர் சமுதாயத்துக்கு பாதிக்கப்பட்ட இக்கோயிலில் சித்திரை கொடை விழா இம்மாதம் 22 ஆம் தேதி  கும்பாபிஷேகம், பூஜையுடன் தொடங்கியது. அன்றைய தினம் இரவில் திருவிளக்கு பூஜை , குடி அழைப்பு, வில்லிசை, மாக்காப்பு, அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.
கொடை விழாவில் 2 ஆம் நாளான்று காலையில் அற்புத விநாயகர் கோயிலில் இருந்து திரு மஞ்சன பால்குட ஊர்வலம்,  அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, அன்னதானம் மாலையில் திருமுருகன் நாட்டியாலயா குழுவினரின்  பரத நாட்டியம், வில்லிசை, இரவில் சிறப்பு அலங்கார பூஜை ஆகியவை நடைபெற்றன.
கொடை விழாவன்று காலையில் அம்மனுக்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். தொடர்ந்து அம்பாள் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT