திருநெல்வேலி

ஆய்க்குடி அமர் மறுவாழ்வு கல்வி நிறுவனத்தில் கருத்தரங்கு

DIN

ஆய்க்குடி அமர் மறுவாழ்வு அறிவியல் கல்வி நிறுவனத்தில் மாற்றுத் திறனாளிகள் கல்வி முறை குறித்த மாநில அளவிலான கருத்தரங்கு நடைபெற்றது.
"மாற்றுத் திறனாளிகள் உள்ளடங்கிய கல்வி முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் சவால்கள்' எனும் தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு அமர் சேவா சங்கச் செயலர் எஸ்.சங்கரராமன் தலைமை வகித்தார்.  சங்கத் தலைவர் எஸ்.ராமகிருஷ்ணன், பொருளாளர் பட்டம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கை, சேரன்மகாதேவி ஸ்காட் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், பல்கலைக்கழக மானியக்குழு பேராசிரியருமான அன்னராஜா தொடங்கிவைத்தார். அமைப்புச் செயலர் காசிவிஸ்வநாதன் கருத்தரங்கின் நோக்கம் குறித்துப் பேசினார்.
இதையடுத்து நடைபெற்ற அமர்வுகளில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல்துறை இணைப் பேராசிரியை சுஜாதா மாலினி, கோவை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி, ஆராய்ச்சி நிறுவன உதவிப் பேராசிரியை இந்திராணி, ஆய்க்குடி அமர்சேவா சங்கம் சிறப்பு பள்ளி ஆசிரியை பாண்டியம்மாள் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கருத்தரங்கு நிறைவு நிகழ்ச்சிக்கு, ஆய்க்குடி அமர் மறுவாழ்வு அறிவியல் கல்வி நிறுவன முதல்வர் சூரியநாராயணன் தலைமை வகித்தார். இயக்குநர் மீனாட்சி அறிக்கை வாசித்தார். அலுவலக மேலாளர்கள் கிருஷ்ணன், சீனிவாசன், நீலகண்டன் உள்ளிட்டோர் பேசினர். அமைப்பின் பொருளாளர் கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். 
அமைப்புச் செயலர் பரமேஸ்வரி வரவேற்றார். அமர்சேவா சங்க மறுவாழ்வுத் துறை தலைவர் செல்வராஜ் நன்றி 
கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

'வீர தீர..’ துஷாரா!

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

SCROLL FOR NEXT