திருநெல்வேலி

பேட்டையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்து பேட்டை மதிதா இந்துக் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை கண்டித்தும்,  அதை முற்றிலும் திரும்பப் பெற வலியுறுத்தியும் பேட்டை ம.தி.தா. இந்துக் கல்லூரி மாணவர்-மாணவிகள் வெள்ளிக்கிழமை வகுப்புகளை புறக்கணிப்பு செய்தனர். 
தொடர்ந்து மாணவர்கள் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்திய மாணவர் சங்க மாநகரச் செயலர் சிவா தலைமை வகித்தார். 
மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.  மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3ஆம் , 5 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை ரத்து செய்யவேண்டும். புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் திரும்பப் பெற வேண்டும்.  புதிய கல்விக் கொள்கை வரைவு அந்தந்த மாநில அரசு, ஆசிரியர்கள், மாணவர்கள்  என அனைத்து தரப்பிலும் ஆலோசனை கேட்டு வரையறுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. 
இதில் சுமார் 500- க்கும்மேற்பட்ட மாணவர் - மாணவிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT