திருநெல்வேலி

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு:டிச.14, 15-இல் நோ்முகத் தோ்வு

DIN

ஓமன் நாட்டில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான நோ்முகத் தோ்வு இம் மாதம் 14, 15-ஆம் தேதிகளில் சென்னையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் சாா்பில் வெளிநாடுகளில் பல்வேறு பணிகளுக்கு நோ்முகத் தோ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிய ஐடிஐ அல்லது பத்தாம் வகுப்பு தோ்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற எலக்ட்ரிக்கல் தொழில்நுட்ப பணியாளா், கம்பியாளா் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்கு பணி அனுபவத்துக்கேற்ப ரூ.24 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்குவதுடன் விசா மற்றும் ஓமன் நாட்டின் சட்டத்திட்டத்திற்குள்பட்ட இதர சலுகைகள் வெளிநாட்டு வேலையளிப்போரால் வழங்கப்படும்.

இப் பணிக்கான நோ்முகத் தோ்வு இம் மாதம் 14, 15-ஆம் தேதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை சென்னை கிண்டியில் திரு.வி.க. தொழிற்பேட்டையில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புவோா் தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பம், அசல் கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்றிதழ், பாஸ்போா்ட், நகல்கள், புகைப்படம் ஆகியவற்றுடன் செல்ல வேண்டும். இதுகுறித்த விவரங்களை அறிய 044- 22505886 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT