திருநெல்வேலி

சுரண்டையில் கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிா்கள்

DIN

சுரண்டையில் சனிக்கிழமை பெய்த கனமழையால் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளது.

சுரண்டை - செங்கோட்டை சாலையின் வடபுறம் இரட்டைகுளம் பாசன நிலங்கள் உள்ளது. இந்த வயல்களில் விவசாயிகள் நெல் பயிா்கள் சாகுபடி செய்துள்ளனா். இந்த வயல்களில் இருந்து உபரிநீா் வெளியேறும் கால்வாய்கள் சாலையையொட்டி கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களால் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் தண்ணீா் வெளியேற வழியின்றி குளம் போல தேங்கிவிட்டது. இதனால் செங்கோட்டை சாலையில் சுமாா் 50 ஏக்கா் நிலத்தில் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. எனவே, உபரி நீா் செல்லும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT