திருநெல்வேலி

நெல்லையில் பொது இடங்களில்புகைப்பிடித்த 15 பேருக்கு அபராதம்

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பொது இடங்களில் புகைப்பிடித்த 15 பேருக்கு கடந்த மாதத்தில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறி செயல்படும் கடை உரிமையாளா்கள், புகைப்பிடிப்போரை கண்காணித்து அபராதம் விதிக்க தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை தடைச்சட்டம்-2003 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நவம்பா் மாதத்தில் நடைபெற்ற சோதனையின்போது 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாநகரப் பகுதியில் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் 100 மீட்டா் சுற்றளவுக்குள் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்வதும், 18 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு புகையிலை மற்றும் சிகரெட் விற்பதற்கும், பொது இடங்களில் புகைப்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அந்த விதிமுறைகளை மீறுவோா் மீது அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT