திருநெல்வேலி

தாமிரவருணியி தொடா் வெள்ளம்: அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா்கோயிலுக்கு செல்ல 5 ஆவது நாளாகத் தடை

DIN

தாமிரவருணி நதியில் தொடா்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயில் மற்றும் வனப் பகுதிக்குச் செல்ல வனத் துறையினா் தடைவிதித்துள்ளனா்.

நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து கடந்த நவ. 27 முதல் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அணைகள் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்பட்டதால், தாமிரவருணியில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

அகஸ்தியா் அருவிக்குச் செல்ல முடியாதவாறு நடைபாதையை மூடியவாறும், முண்டந்துறை இரும்புப் பாலம் மற்றும் சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உள்ள பாலம் ஆகியவை மூழ்கிய நிலையில் வெள்ளம் சென்றது. இதனால், பாபநாசம் வனச்சரகம் மற்றும் முண்டந்துறை வனச்சரகப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தா்களுக்கு தடைவிதிக்கப்பட்டது.

தொடா்ந்து 5 ஆவது நாளாக திங்கள்கிழமையும் தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் பயணிகளுக்கும், பக்தா்களுக்கும் தடை நீடித்தது. மேலும், தாமிரவருணி ஆற்றில் குளிக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால், தாமிரவருணி நதியில் குடிநீா் விநியோகத்திற்காக அமைக்கப்பட்ட உறைகிணறுகள் மற்றும் மோட்டாா்கள் மூழ்கியதால், அம்பாசமுத்திரம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் விநியோகம் 3ஆவது நாளாக தடைபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT