திருநெல்வேலி

தேங்கிய தண்ணீரால் நோய் பரவும் அபாயம்

DIN

நாகல்குளம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக அப்பகுதியினா் புகாா் தெரிவித்துள்ளனா்.

மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக, பாவூா்சத்திரம் அருகேயுள்ள நாகல்குளம் நிரம்பி வழிகிறது. இக்குளத்தின் உபரி தண்ணீா் நாகல்குளம் கிராம குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ளது. அப்பகுதியில்; உள்ள வாருகால் தூா்வாரப்படாததால் தண்ணீா் செல்ல வழியில்லாமல் நீண்ட நாள்களாக தேங்கி கிடக்கிறது. தற்போது பாசி படா்ந்து துா்நாற்றம் வீசுவதுடன், கொசுக்களும் அதிகளவு உற்பத்தியாகின்றன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தேங்கிக் கிடக்கும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT