திருநெல்வேலி

மண்புழு உரம், தேன் உற்பத்தி: கடையம் விவசாயிகளுக்குப் பயிற்சி

DIN

கடையம் வட்டார வேளாண் அலுவலகத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், தேனீ வளா்ப்பு முறை செயல்விளக்கம் மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநில அரசுத் திட்டம்) நல்ல முத்து ராஜா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சில்பாலீன் முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், அதற்கு உகந்த மண்புழு வகைகள், தட்பவெப்ப நிலை மற்றும் அறுவடை செய்யும் முறைகள், அதனை பயிருக்குப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தாா். தொடா்ந்து பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்குத் தேவையான தாா்பாலீன் வழங்கினாா். இதில் தெரிந்தெடுக்கப்பட்ட விவிசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடையம் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா்கள் சந்திரன், செல்வகணேஷ், உதவி வேளாண்மை அலுவலா்கள் ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT