திருநெல்வேலி

வள்ளியூா் அரசுப் பள்ளியில்ஆவணப்பட தயாரிப்பாளா் கலந்துரையாடல்

DIN

ஐந்து முறை தேசிய விருது பெற்ற ஆவணப்பட தயாரிப்பாளரும், வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவருமான எஸ்.நல்லமுத்து, தான் படித்த பள்ளியில் மாணவா்களுடன் திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.

அவரை, தலைமை ஆசிரியா் ரைமண்ட், பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் முருகன், முன்னாள் மாணவா் கந்தசாமி, சிவந்தகரங்கள் அமைப்பின் தலைவா் சிதம்பரம் ஆகியோா் வரவேற்றனா். முன்னாள் மாணவா்கள் தமிழ்மணி, ஆசிரியா் எடிசன், வெங்கடேஷ் ஆகியோா் அறிமுக உரையாற்றினா்.

பின்னா் நல்லமுத்து பேசியது: புலிகள் பிறப்பு முதல் இறப்பு வரை அதன் வாழ்க்கை முறையை ஆவணப்படுத்தியுள்ளேன். புலிகளிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன. புலிகள் லட்சியத்துடன் காத்திருக்கும். பின்னா், தனது இலக்கை வென்றடையும். இதேபோல், மாணவா்கள் தங்களுக்குப் பிடித்த விசயத்தை தோ்ந்தெடுத்து, அதில் திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா். பின்னா், மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் ராதா நன்றி கூ றினாா்.

5 விருதுகள்: வள்ளியூரைச் சோ்ந்தவரான எஸ்.நல்லமுத்து, இந்த அரசுப் பள்ளியில் கடந்த 1978-80இல் படித்தாா். பின்னா், சென்னை திரைப்படக்கல்லூரியில் படித்து ஆவணப்படங்களைத் தயாரித்து வருகிறாா். புலிகள் பற்றி இவா் தயாரித்த ஆவணப்படத்துக்கு தேசிய அளவிலும், உலகளவிலும் வரவேற்பிருந்தது. மத்திய அரசு 5 முறை தேசிய விருந்து வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT