திருநெல்வேலி

வரகனுர் வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை  வாங்க மறுத்து சிவகாசியில் உறவினர்கள் போராட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்டம் வரகனூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை வாங்க மறுத்து  சிவகாசி அரசு மருத்துமனையில், இறந்தவரின் உறவினர்கள் சனிக்கிழமை  போராட்டம் நடத்தினர்.
திருவேங்கடம் அருகேயுள்ள வரகனூரில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் உயிரிழந்த தொழிலாளர்களில் ஒருவரான திருத்தங்கல் எம்.ஜி.ஆர்.காலனியைச் சேர்ந்த நீதிராஜனின்(45) சடலம் வெள்ளிக்கிழமை இரவு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. இங்கு சனிக்கிழமை  உடற்கூறாய்வு
நடைபெற்றது.
இந்நிலையில் சிவகாசி அரசு மருத்துவமனை வளாகத்தில் திரண்ட நீதி ராஜனின் உறவினர்கள், பட்டாசு ஆலை உரிமையாளர் இழப்பீடாக ரூ. 5 லட்சம்  கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் தலைமையிலான போலீஸார் ,போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பின்னர் ரூ 1.25 லட்சம் ரொக்கமும், ரூ. 2 லட்சத்திற்கு பின் தேதியிட்ட காசோலையயும் வழங்குவதாக பட்டாசு ஆலை உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டது.  இதற்கு சம்மதம் தெரிவித்த பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காலை சுமார் 10 மணிக்கு தொடங்கிய இப்போராட்டம் பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் முடிவுக்கு வந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த வரகுணபுரம் சந்தானமாரி மனைவி கிருஷ்ணம்மாள்(50), குகன்பாறை கணபதி மனைவி குருவம்மாள்(40), சின்ன மாரியப்பன் மனைவி சங்கரேஸ்வரி(45) , திருத்தங்கல் ராஜாமணி மகன் சரவணன்(54) ஆகிய 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனை தீக்காய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT