திருநெல்வேலி

போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துத் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்துத் தொழிற்சங்க ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தொமுச அமைப்புச் செயலர் ஏ.தர்மன் தலைமமை வகித்தார். சிஐடியு எஸ்.பெருமாள், எஸ்.ஜோதி, ஏஐடியுசி ஆர்.ராதாகிருஷ்ணன், பி.சுடலைமுத்து, ஹெச்.எம்.எஸ்.பி.சுப்பிரமணியன், பி.பாலசுப்பிரமணியன், ஐஎன்டியுசி பி.ஆவுடையப்பன், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். என்.மகாவிஷ்ணு நன்றி கூறினார்.
தீர்மானங்கள்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கையின்போது அரசுப் போக்குவரத்துக் கழக வரவு-செலவு இடைவெளி பணத்தை அரசு மானியமாக மின்வாரியத்துக்கு வழங்குவது போல வழங்குவதாக அறிவிக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு கடந்த 2018 முதல் வழங்கப்படாமல் உள்ள பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். 1-9-2019 முதல் பெறப்பட வேண்டிய புதிய சம்பள ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்தி இம் மாதம் 12ஆம் தேதி வண்ணார்பேட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தொழிற்சங்கத்தினர் பங்கேற்பது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT