திருநெல்வேலி

கடையநல்லூரில் இன்று நடக்கவிருந்த போராட்டம் ரத்து

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை(ஜூலை15)

DIN

கடையநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை(ஜூலை15) நடத்தவிருந்த  காத்திருப்புப் போராட்டம் கைவிடப்பட்டது.
கடையநல்லூர் வட்டம், போகநல்லூர், நயினாரகரம் உள்ளிட்ட பகுதிகளில் காலியாகவுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அழகப்பராஜா, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துப் பேசினார். மேலும், இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதற்கு தகுதியான இடங்கள் தொடர்பாக சங்கத்தினரிடம் ஜூலை 27ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காத்திருப்புப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. எனினும், வீட்டு மனை கோரி மனு அளிக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

SCROLL FOR NEXT