திருநெல்வேலி

ரூ.3.5 கோடியில் கருவூல அலுவலகம் கட்டும் பணி: ஆணையர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.3.5 கோடியில் கட்டப்பட்டு வரும் கருவூலக அலுவலக கட்டடப் பணிகளை 

DIN

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.3.5 கோடியில் கட்டப்பட்டு வரும் கருவூலக அலுவலக கட்டடப் பணிகளை கருவூல கணக்குத் துறை ஆணையர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். 
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தக் கட்டுமானப் பணிகளை தமிழக அரசின் முதன்மை செயலரும், கருவூல கணக்குத்துறை ஆணையருமான தென்காசி ஜவஹர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர்  அவர் கூறியதாவது:  திருநெல்வேலி மாவட்ட கருவூல அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்காக ரூ.3.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள்  நடைபெற்று வருகின்றன.  இப்பணிகள் 12 மாத காலத்துக்குள் முடிக்கப்பட்டு அலுவலக பயன்பாட்டுக்கு வழங்கப்படும் என்றார்.
இந்த ஆய்வின்போது,  ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்,  பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் தேவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

SCROLL FOR NEXT