திருநெல்வேலி

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு: தென்காசியில் விழிப்புணர்வுப் பேரணி

DIN

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, கல்வித்துறை சார்பில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் விழிப்புணர்வுப் பேரணி தென்காசியில் நடைபெற்றது.
ஆர்.சி.தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. தொடர்ந்து, பள்ளியின் முன்பிருந்து விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட கல்விஅலுவலர் சீனிவாசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பள்ளித் தாளாளர் சகாய சின்னப்பன் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் மாரியப்பன், உதவி பங்குத்தந்தை லூர்து மரியசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்ற இப்பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. இதில், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் பரமேஸ்வரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT