திருநெல்வேலி

செங்கோட்டை செக்கடி விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்

DIN

செங்கோட்டையில்  குலசேகர நாத கோயிலின் உப கோயி லும்,  ஆயிரம் ஆண்டுகள் பழைமையா னது மான  ஸ்ரீ செக்கடி விநாயகர் கோயி ல் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குருவான சூரிய பகவானுடன் விநாயகர் அமர்ந்து அபூர்வமாக காட்சியளிக்கும் இந்தக் கோயிலில், ஜீர்ணோர்த்தாரண அஷ்டபந்தன மகா
கும்பாபிஷேக விழா கடந்த 15ஆம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 16ஆம் தேதியில் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.  பின்னர், 2 மற்றும் 3ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. 
ஞாயிற்றுக்கிழமை காலை 4 ஆம் கால யாகசாலை பூஜையைத் தொடர்ந்து விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார் கணேச பட்டர்  கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT