திருநெல்வேலி

சுரண்டை அழகுபார்வதி அம்மன் கோயிலில்  சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

DIN

சுரண்டை ஸ்ரீஅழகுபார்வதி அம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஆண்டு தோறும் 10 நாள்கள் சித்திரைத் திருவிழா  வெகுவிமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற்றது. விழாநாள்களில், 7 சமுதாயத்தைச் சேர்ந்த மண்டகப்படிதாரர்களால்  அம்மனுக்கு சிறப்பு பூஜை, கலைநிகழ்ச்சி, சப்பர வீதியுலா உள்ளிட்டவை நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக 9ஆம் திருநாளான மே 8ஆம் தேதி  மாலை 3 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையைத் தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருள, தேரோட்டம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் 7 சமுதாய தலைவர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT