திருநெல்வேலி

குற்றாலம் மலைப் பகுதியில் தீ

திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம்  மலைப்பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் முதல் தீப்பற்றி எரிந்து வருகிறது.

DIN


திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம்  மலைப்பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் முதல் தீப்பற்றி எரிந்து வருகிறது.
 குற்றாலத்தில் இருந்து பழைய குற்றாலம் செல்லும் சாலையில் தரையிலிருந்து 800 மீட்டர் உயரத்தில் காட்டாற்று அருவி பகுதி அமைந்துள்ளது.  இப்பகுதியில் மூங்கில், அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் வனவிலங்குகள் உள்ளன. சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக ஒன்றரை ஹெக்டேர் பரப்பளவில் தீப்பற்றி எரிந்து வருகிறது.  கடந்த சில தினங்களாக இப்பகுதியில் கடுமையான காற்று வீசுவதால் தீ வேகமாக மற்ற பகுதிகளுக்கும் பரவி வருகிறது.  இதனால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.  குற்றாலம் வனவர் பாண்டியராஜ் தலைமையில் குற்றாலம் மற்றும் புளியரை வனப் பணியாளர்கள் 30 பேர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்தின் காரணமாக அரிய வகை மூலிகைகளும் வன விலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT