திருநெல்வேலி

பார்வையற்றோர் பள்ளியில் அமைச்சர் ராஜேந்திர பால் ஆய்வு

DIN

வடக்கு தில்லியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளி மற்றும் விடுதியில் தில்லியின் சமூக நலத்துறை அமைச்சர் ராஜேந்திர பால் கெளதம் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். 
இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறியதாவது: 
கிங்ஸ்வே கேம்ப் பகுதியில் அமைந்துள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி மற்றும் விடுதியில் மாணவர்களுக்கான வசதிகள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பால் ஆய்வு நடத்தினார். அந்தப் பள்ளியில் தற்போது 140 மாணவர்கள் தங்கிப் பயின்று வருகின்றனர். 
பள்ளி மற்றும் விடுதியின் சுத்தம், படுக்கை வசதி, மாணவர்களுக்கான புத்தகங்கள், உடைகள், உணவுகள் உள்ளிட்ட வசதிகள் தொடர்பாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். 
ஆய்வு முடிவில் மாணவர்களுக்கான வசதிகள் முறையாக பராமரிக்கப்படுவதாக அவர் திருப்தி தெரிவித்தார் என்று அந்த அதிகாரி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT