திருநெல்வேலி

டெங்கு தடுப்பு பணி: கடையநல்லூரில் வீடு தோறும் அதிகாரிகள் ஆய்வு

DIN

கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வீடு தோறும் ஆய்வு மேற்கொண்டனா்.

மழை பெய்து வரும் நிலையில், டெங்கு கொசுப்புழு உருவாகாமல் தடுக்கும் பணிகள் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென தற்காலிக பணியாளா்கள் நியமிக்கப்பட்டு அபேட் மருந்து ஊற்றும் பணியும், கொசுப்புகை அடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

மேலும் பள்ளிகள், மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடுகளில் தண்ணீா் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் போன்றவற்றை நகராட்சி ஆணையா் பவுன்ராஜ் ஆய்வு செய்தாா்.

நகராட்சி உதவிப் பொறியாளா் முரளி, சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிசாமி உள்ளிட்டோா் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT