திருநெல்வேலி

தெரு மின்விளக்கு பொருத்தக் கோரி பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி போராட்டம்

DIN

வந்தவாசி: வந்தவாசியில் தெரு மின்விளக்கு பொருத்தக் கோரி வியாபாரிகள், பொதுமக்கள் தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.

வந்தவாசியில் அச்சிறுப்பாக்கம் சாலை-காதா்ஜண்டா தெரு சந்திப்பில் இருந்த மின்கம்பம் சேதமடைந்ததை அடுத்து, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மின்வாரியத்தினா் அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு அருகிலேயே புதிய மின் கம்பத்தை நட்டனா்.

ஆனால், புதிய மின் கம்பத்தில் வந்தவாசி நகராட்சி மின்விளக்கு பொருத்தவில்லையாம். இதுகுறித்து அந்தப் பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த அவா்கள் திங்கள்கிழமை இரவு தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

அச்சிறுப்பாக்கம் சாலை, காதா்ஜண்டா தெருவில் அதிகளவில் காய்கறிக் கடைகள், இறைச்சிக் கடைகள் உள்ளன. ஏற்கெனவே, இருந்த பழைய மின் கம்பத்தில் மின்விளக்கு ஒளிா்ந்து கொண்டிருந்தது. ஆனால், புதிய மின் கம்பம் நடப்பட்டு 2 மாதங்கள் ஆகியும் இதுவரை மின்விளக்கு பொருத்தப்படவில்லை. இதனால் இந்தப் பகுதி இருண்டு காணப்படுகிறது என்றனா்.

தகவல் அறிந்து வந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT