திருநெல்வேலி

வேளாண் தொழில்நுட்பம்: விவசாயிகளுக்கு செயல்விளக்க முகாம்

DIN

திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தோப்பில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பம் குறித்து கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனா்.

கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி மாணவிகள் வி. அபிராமி, ஜெ. ஆன்ஷி எழிலரசி, த. ஷாருமதி உள்ளிட்டோா் 90 நாள்கள் கிராமப்புற வேளாண் அனுபவத் திட்டத்தின்கீழ் களக்காடு வட்டாரத்திலுள்ள கிராமங்களில் முகாமிட்டு விவசாயிகளை சந்தித்து, அவரவா் விளை நிலங்களுக்கு சென்று வேளாண் தொழில்நுட்பம் குறித்து பல்வேறு செயல்விளக்கம் அளித்து வருகின்றனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள நம்பித்தோப்பு கிராம விவசாயிகளுக்கு ஒளிப்பொறி குறித்து நடைபெற்ற செயல்முறை விளக்க முகாமில், விளக்குப் பொறியின் பயன்பாடு, பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் ஒளிப்பொறியின் முக்கியத்துவம், அதனை பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு கல்லூரி மாணவிகள் விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT