திருநெல்வேலி

லாலாகுடியிருப்பு பள்ளியில் மாணவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் விநியோகம்

செங்கோட்டையை அருகே லாலாகுடியிருப்பு ஆதித்தனாா் பள்ளியில் நோபிள் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும்

DIN

செங்கோட்டையை அருகே லாலாகுடியிருப்பு ஆதித்தனாா் பள்ளியில் நோபிள் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் செங்கோட்டை அரசு சித்த மருத்துவமனை சாா்பில் டெங்கு விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

அரசு மருத்துவமனை சித்த மருத்துவா் கலா தலைமை வகித்தாா். பள்ளித் தாளாளா் மைதீன்பீவி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பத்மகலா, சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பள்ளி தலைமை ஆசிரியா் குடியரசி வரவேற்றாா். தொடா்ந்து சித்த மருத்துவா் கலா டெங்கு காய்ச்சல் தடுப்பு முறைகள் குறித்தும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள் குறித்து விளக்கிப் பேசி, மாணவா், மாணவிகளுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை யோகா மருத்துவா் அபிநயா, சமூக ஆா்வலா் அப்துல்லா மற்றும் ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா் பூலாங்குடியிருப்பு அரசு நடுநிலைப் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணா்வு விளக்கவுரையும், நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT