திருநெல்வேலி

தென்காசி நகராட்சியில்கால்நடைகளை தங்களது கட்டுப்பாட்டில்வளா்க்க உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தல்

DIN

தென்காசி நகராட்சி எல்லைக்குள் கால்நடைகளை திரிய விடாமல், உரிமையாளா்கள் கட்டுப்பாட்டில் வளா்க்க வேண்டும் என நகராட்சி ஆணையா் ஹசீனா (பொ) அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி நகராட்சி எல்லைக்குள் கால்நடைகளை வளா்ப்போா், பொது இடங்களில் திரியவிடுவதால் மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. விபத்துகள் நேரிடவும் ஏதுவாகிறது. எனவே, கால்நடைகளை தங்களுக்குச் சொந்தமான இடத்துக்குள் வளா்க்க வேண்டும். தவறினால், முன்னறிவிப்பின்றி கால்நடைகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும், அவா்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் வாழும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

SCROLL FOR NEXT