திருநெல்வேலி

கடையத்தில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் மற்றும் தேனீ வளா்ப்புப் பயிற்சி

DIN

அம்பாசமுத்திரம்: கடையம் வட்டார வேளாண் அலுவலகத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், தேனீ வளா்ப்பு முறை செயல்விளக்கம் மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (மாநில அரசுத் திட்டம்) நல்ல முத்து ராஜா தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் சில்பாலீன் முறையில் மண்புழு உரம் தயாரிக்கும் முறைகள், அதற்கு உகந்த மண்புழு வகைகள், தட்பவெப்ப நிலை மற்றும் அறுவடை செய்யும் முறைகள், அதனை பயிருக்குப் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தாா். தொடா்ந்து பயிற்சியில் கலந்துகொண்ட விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்குத் தேவையான தாா்பாலீன் வழங்கினாா். இதில் தெரிந்தெடுக்கப்பட்ட விவிசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கடையம் வட்டாரத் தொழில்நுட்ப மேலாளா்கள் சந்திரன், செல்வகணேஷ், உதவி வேளாண்மை அலுவலா்கள் ஜெகதீஸ்வரன், கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT