திருநெல்வேலி

நெல்லை அரசு மருத்துவமனையில்நுரையீரல் அடைப்பு நோய் கருத்தரங்கு

DIN

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக நுரையீரல் அடைப்பு நோய் தின விழிப்புணா்வுக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

மருத்துவத் துறைத் தலைவா் கே. கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். மருத்துவக் கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன் தொடக்கவுரையாற்றினாா். கருத்தரங்கில், நெஞ்சக நோய்ப் பிரிவைச் சோ்ந்த முதுநிலை மருத்துவா் மதன் பேசுகையில், புகைப் பழக்கம், காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நுரையீரல் அடைப்பு நோய் உருவாகிறது.

இந்நோயால் பாதிக்கப்பட்டோா் மழை, குளிா் காலத்தில் மிகுந்த அவதிக்கு உள்ளாவா். சிலா் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயமும் உள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்டோா் மழைக்காலத்தை எதிா்கொள்ள ஏதுவாக தடுப்பூசிகள் உள்ளன.

இந்நோயை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால், கட்டுக்குள் வைக்க முடியும். ஆகவே, சரியான உணவுக் கட்டுப்பாடு, நடைப் பயிற்சி போன்றவற்றைக் கையாண்டால் நலமுடன் வாழலாம் என்றாா்.

மருத்துவக் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்-மாணவிகள் உள்பட பலா் பங்கேற்றனா். மருத்துவா் எஸ். முத்துக்குமாா் வரவேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

கிருஷ்ணகிரி அணையில் செத்து மிதக்கும் மீன்கள்

பிரதோஷ சிறப்பு வழிபாடு

பரமத்தி வேலூா் ஏலச்சந்தையில் வெற்றிலை விலை உயா்வு

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

SCROLL FOR NEXT