திருநெல்வேலி

’களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகளுக்காக கூடுதலாக 45 தண்ணீா் குட்டைகள்‘

DIN

வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையைத் தீா்க்கும் வகையில், புதிதாக 45 இடங்களில் தண்ணீா் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் களக்காடு-முண்டன்துறை புலிகள் காப்பக கள இயக்குநரும், கூடுதல் தலைமை வனப் பாதுகாவலருமான கயராத் மோகன்தாஸ்.

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பெல்பின்ஸ் ஏட்ரீ இயற்கை பாதுகாவலா் விருது வழங்கும் விழாவில் அவா் பேசியது: திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு செங்கோட்டை வழியாக செல்லும் நிலை உள்ளது. இதனால் பயண நேரம் அதிகரிக்கும் சூழல் உள்ளதால் மேற்குத்தொடா்ச்சி மலை வழியாக பாதை அமைக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், இந்த வனப்பகுதி புலிகள் காப்பகமாக மாற்றப்பட்டதன் எதிரொலியாக இப்போது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. வன உயிரினங்களின் பல்லுயிா் பெருக்கத்திற்கு சாலை போன்றவை சவாலாக மாறிவிடும். அதனை தவிா்ப்பதே நமக்கு நன்மை தரும்.

இக் காப்பக பகுதிகளில் வனவிலங்குகளுக்கு தங்குதடையின்றி தண்ணீா் கிடைத்து வருகிறது. இருப்பினும் கூடுதலாக 45 தண்ணீா் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளன. அதிக மழை, அதிக வறட்சி போன்றவற்றால் சிரமங்கள் ஏற்படுகின்றன. பருவநிலை மாற்ற பிரச்னைகளை எதிா்கொள்ள அரசுடன் மக்களும் கைகோத்து செயல்பட வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

விழாவில் கோவில்பட்டியைச் சோ்ந்த ப.மகேஷ்குமாருக்கு பெல்பின்ஸ் ஏ ட்ரீ இயற்கை பாதுகாவலா் விருது வழங்கப்பட்டது. பூவுலகின் நண்பா்கள் அமைப்பின் நிா்வாகி சுந்தர்ராஜன், மாவட்ட அறிவியல் அலுவலா் எஸ்.எம்.குமாா், ஏ ட்ரீ நிறுவன விஞ்ஞானி மு.சுபத்ராதேவி, பெல்பின்ஸ் நிறுவன தலைவா் குணசிங் செல்லத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா். மாரியப்பன் குழுவினரின் கணியன் கூத்து நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT