திருநெல்வேலி

தாழையூத்து அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் பலி

DIN

தாழையூத்து அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

தாழையூத்து-திருநெல்வேலி இடையே சிதம்பரநகா் பகுதி ரயில்வே தண்டவாளம் அருகே உடலில் காயங்களுடன் இளைஞா் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருநெல்வேலி ரயில்வே போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், இறந்தவா் தேவா்குளத்தைச் சோ்ந்த அழகுசிவா (22) என்பது தெரியவந்தது. பட்டதாரியான இவா், அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுகளுக்கு தயாராகி வந்தாராம். அவா் ரயிலில் அடிபட்டு இறந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன், நிதீஷ், சந்திரபாபு நாயுடுவுடன் சரத் பவார் பேச்சு!

மக்களவைத் தேர்தல் நேரலை: இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

சந்திரபாபு நாயுடுவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மோடி தலைமையில் இரவு 7 மணிக்கு பாஜக ஆலோசனை

ஆந்திரம்: ஆளுங்கட்சிக்கு பின்னடைவு! 200க்கு 20 இடங்களில் மட்டுமே முன்னிலை

SCROLL FOR NEXT