திருநெல்வேலி

மதவக்குறிச்சியில் கொலையுண்ட  விவசாயி உடலை வாங்க மறுத்து போராட்டம்

DIN

திருநெல்வேலி அருகேயுள்ள மதவக்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட விவசாயி உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதவக்குறிச்சியைச் சேர்ந்தவர் நயினார் மகன் முருகன் (52), விவசாயி. அதே பகுதியில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை வழிமறித்த மதவக்குறிச்சியைச் சேர்ந்த முத்துராமலிங்கம் (30) தகராறு செய்ததோடு, அரிவாளால் வெட்டியதில் முருகன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து மானூர் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து முத்துராமலிங்கத்தை திங்கள்கிழமை கைது செய்தனர். இதற்கிடையே, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, முருகனின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் தர்னாவில் ஈடுபட்டனர். கொலை செய்யப்பட்ட முருகனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள முத்துராமலிங்கத்தை தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். அவர்களுடன் போலீஸார், வருவாய்த் துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT