திருநெல்வேலி

மணிமுத்தாறு அருகே ஊருக்குள் புகுந்த கரடி

DIN

மணிமுத்தாறு ஊருக்குள் புகுந்த கரடியை வனத்துறை, தீயணைப்புப்படையினர் 9 மணி நேரம்  போராடி வனப்பகுதியினுள் விரட்டினர்.
மணிமுத்தாறு பெருங்கால் கரை அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது. இக்குடியிருப்புக்குள் புதன்கிழமை இரவு கரடி புகுந்ததாம். இதை கண்ட விவசாயி வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். அம்பாசமுத்திரம் வனச்சரகர் கார்த்திகேயன்தலைமையில் வனப்பணியாளர்கள், தீயணைப்புப்படையினர் அங்கு சென்று கரடியை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பிலுள்ள மரத்தில் இருந்த கரடியை சுமார் 9 மணி நேரம் போராடி வியாழக்கிழமை அதிகாலையில் வனப்பகுதிக்குள் விரட்டினர். சில மாதங்களுக்கு முன் சிறுத்தை ஊருக்குள் புகுந்து ஆட்டுக்குட்டியை கடித்துக் கொன்றது. இந்நிலையில் கரடி ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

துளிகள்...

SCROLL FOR NEXT