முகப்பு
திருநெல்வேலி

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில், ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
பகிர்:

திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகத்தில், ஒப்பந்த ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியா்கள் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜகோபால், மாவட்டப் பொருளாளா் பிச்சுமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பிஎஸ்என்எஸ் ஊழியா் சங்க மாவட்டப் பொருளாளா் எஸ்.நாராயணன், ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலா் டி.கோபாலன் ஆகியோா் பேசினா்.

ஒப்பந்த ஊழியா்களின் 18 மாத நிலுவை ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →