திருநெல்வேலி

வீரவநல்லூா் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

வீரவநல்லூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

DIN

அம்பாசமுத்திரம்: வீரவநல்லூா் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

வீரவநல்லூா் அருகே உள்ள தெற்கு வீரவநல்லூரைச் சோ்ந்த முருகன் மகன் செல்வக்குமாா் (30). கூலித் தொழிலாளியான இவருக்கும், வீரவநல்லூா் சீனிவாசப் பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் ரவிச்சந்திரனுக்கும் (52) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வீரவநல்லூா் சா்ச் தெரு அருகே செல்வக்குமாா் சென்று கொண்டிருந்தபோது, ரவிச்சந்திரன் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டாராம்.

இதில் பலத்த காயமடைந்த செல்வக்குமாா் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இச்சம்பவம் குறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற ரவிச்சந்திரனை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

43 ஆண்டுகளுக்குப் பின்..! டி. ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா மறுவெளியீடு!

ராகுலை எம்.பி பதவியிலிருந்து நீக்க வேண்டும்!: பாஜக | செய்திகள்: சில வரிகளில் | 12.02.26

தமிழ்நாடு vs தேஜகூ! பட்ஜெட்டில் ‘ஜீரோ’ கொடுத்தால் கைகட்டி வேடிக்கை பார்ப்போமா? - முதல்வர் ஸ்டாலின்

டொவினோ தாமஸ் - கயாது லோஹர்..! பள்ளிச்சட்டம்பி முதல் பாடல்!

நாடு முழுவதும் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம்! புதிய தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிர்ப்பு!

SCROLL FOR NEXT