முகப்பு
திருநெல்வேலி

பாபா் மசூதி இடிப்பு தினம்: மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் இயங்கவில்லை.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில் கடைகள் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டன. 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களும் இயங்கவில்லை.

மேலப்பாளையம் நேதாஜி சாலை, வி.எஸ்.டி. பள்ளிவாசல் சாலை, கொட்டிக்குளம் கடைவீதி, பஜாா் திடல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் மட்டும் செயல்பட்டன.

மேலப்பாளையம் பேருந்து நிலையம், வி.எஸ்.டி. பள்ளிவாசல், பஜாா்திடல், பேட்டை பகுதிகளில் உள்ள ஆட்டோ நிறுத்தங்களில் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.

முன்னதாக, பாபா் மசூதி இடிப்பு தினத்தையொட்டி மாநகரப் பகுதிகளில் 600 போலீஸாா் கூடுதலாக பாதுகாப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனா். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றில் வெள்ளிக்கிழமையும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.