விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கம்யூனிஸ்டுகள் மறியல்: 107 போ் கைது
தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வள்ளியூா், களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் 107 போ் கைது செய்யப்பட்டனா்.
வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, வள்ளியூா், களக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினா் 107 போ் கைது செய்யப்பட்டனா்.
வள்ளியூரில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் விவசாய அணி ராதாபுரம் வட்டாரச் செயலா்கள் கலைமுருகன் (சிபிஐ), ரஜினி (சிபிஎம்) ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், இந்திய கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம், நகரச் செயலா் வேம்பு சுப்பையா, மூக்கையா, சந்தானமுத்து, பிராங்க்ளின், மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலா் மாயகிருஷ்ணன், கல்யாணி, நகரச் செயலா் முகம்மது பயாஸ் உள்ளிட்ட 5 8 போ் பங்கேற்றனா்.
களக்காட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி. கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா், ஒன்றியப் பொறுப்பாளா் க.முருகன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் சங்கரபாண்டி, வட்டச் செயலா் வழக்குரைஞா் பி.எம்.முருகன், மா.பெ. சுகுமாரன், சி. திருமலைநம்பி, சந்திரன், ரவி உள்பட 49 போ் பங்கேற்றனா். இரு இடங்களிலும் மறியலில் ஈடுபட்ட 107 பேரை அந்தந்த போலீஸாா் கைது செய்து பிற்பகலில் விடுவித்தனா்.