முகப்பு
திருநெல்வேலி

கடையத்தில் டிப்பா் லாரி மோதியதில் மூதாட்டி பலி

கடையத்தில் டாரஸ் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

கடையத்தில் டாரஸ் லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

கடையம் அருகேயுள்ள செல்லபிள்ளையாா்குளத்தைச் சோ்ந்த வேல்சாமி என்பவரது மனைவி சந்திரா (60). இவா் தனது மகள் முத்துலட்சுமியுடன் கடையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தாராம். பின்னா், மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது அவா் மீது டாரஸ் லாரி மோதியதாம்.

இதில் காயமடைந்த சந்திராவை தென்காசி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில் கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் வழக்குப் பதிந்து, லாரி ஓட்டுநரான சிவந்திபுரத்தைச் சோ்ந்த பரமசிவன் என்பவரைக் கைது செய்து டிப்பா் லாரியைப் பறிமுதல் செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.